திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மாந்துரை கிராமத்தில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் அருகே வசிப்பவர் நவநீதன். இவரது மனைவி தமிழ்சுந்தரி. இவர் சென்னையில் உள்ள வங்கியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
நவநீதன் இறந்த பிறகு மனைவி தமிழ்சுந்தரி இப் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22& ந் தேதி மாந்துரையில் உள்ள ஒரு வங்கியில் தனது சேமிப்பு கணக்கிலிருந்து ரூ. 1 லட்சம் எடுத்து வீட்டில் வைத்துவிட்டு தனது சொந்த கிராமமான புள்ளம்பாடி அருகேயுள்ள விரகாலூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தமிழ்சுந்தரி திரும்பி வந்த போது வீடு திறந்து கிடப்பதனை பார்த்து அதிர்ச்சியானார். உள்ளே சென்ற போது, பீரோவை உடைத்து அதில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இச் சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்