விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரவேண்டும் கிராமசபை கூட்டத்தில் குருவம்பட்டி இளைஞர்கள் வேண்டுகோள்

 


நம்பர் 2 கரியமாணிக்கம் கிராம சபை கூட்டம் குருவம்பட்டி சமுதாயகூடத்தில் நடைபெற்றது

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தின் நிகழ்வில் ஒரு பகுதியாக குருவம்பட்டி இளைஞர்கள் சார்பில் ஒரு மனு ஒன்று கொடுக்கப்பட்டது அதில் கூறப்பட்டதாவது :

குருவம்பட்டியில் 250க்கும் மேற்பட்ட ஆண் பெண் விளையாட்டு வீரர்கள் உள்ளனர் இவர்களுக்கு சரியான பயிற்சி இல்லாத காரணத்தினால் தங்களின் திறமைகளை வெளியில் கொண்டுவர முடியாமல் போய்விடுகிறது. அதற்கு விளையாட்டு மைதானமும் விளையாட்டு உபகரணங்களும் தேவைப்படுகிறது.

 ஆகையால் குருவம்பட்டி குளத்திற்கு அருகில் சுற்றி வேலி அமைத்து சிறிய விளையாட்டு மைதானமும் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் செய்து தருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது.

Post a Comment

Previous Post Next Post