தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் ஜி கல்லுப்பட்டி ஊராட்சியில் 6 வார்டு உறுப்பினர்கள் தலைவரை கண்டித்து தனது ராஜினாமா கடிதத்தை தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வார்டு உறுப்பினர்கள் கூறுகையில் ;
ஊராட்சியில் திட்டப்பணிகளை நிலை குறித்து ஆக்கபூர்வமாக விவாதிக்கவில்லை பல மாதங்களாக கூட்டம் நடத்தப்படவில்லை. ஊராட்சி விதிகளுக்கு முரணானது ஆகும் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதியன்று கூட்டம் நடத்தாமலேயே கூட்டம் நடைபெற்றதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
மேலும் அடிப்படை மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை சரிவர மேற்கொள்ளாமல் பெயரளவில் புகைப்பட ஆதாரத்திற்காக மட்டும் வேலை செய்துள்ளதாக குற்றம் சாட்டினார் இது தவிர நடைபெறாத பணிகள் பலவற்றை முடித்ததாக கணக்கெழுதி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாக அறிகிறோம்.
எனவே மக்கள் பணி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் தவறான செயலுக்கு துணைபோகும் விருப்பமில்லாமலும் ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரின் ஒருதலைப்பட்சமான செயலை கண்டித்து இன்று எங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார்