திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவரது மகன் அசோக்குமார் (25). இவர் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகளான 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கும் நாளடைவில் காதலாக மாறி இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதையும் மீறி கடந்த 6 மாதங்களுக்கு காதல் ஜோடி முன்னதாக திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தம்பதியினர் தங்களின் வாழ்க்கையை சிந்தாமணியில் தொடங்கியுள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அசோக்குமார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றார்.
பின்னர் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக்கேட்ட அசோக்குமார் திடீரென தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து இது குறித்து கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு தாலி கட்டி கர்ப்பம் அடைய வைத்தது விசாரனையில் தெரியவந்தது.
இதையடுத்து கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான அசோக்குமாரை தேடினர்.
இந்த நிலையில் வாலிபர் தாமாகவே முன்வந்து கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.