திருவள்ளூர் மாவட்டம் அருகே பரிதாபம் ; சூடான பால் கொட்டியதில் 1 வயது குழந்தை இறப்பு


குழந்தைகள் சில சுட்டிகளாக இருந்தாலும் அவர்களை முழுமையாக கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். சிறு சிறு விஷயங்களால் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடும் அந்த வகையில் தற்போது

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த மஞ்சங்காரணை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ரவி-சங்கீதா தம்பதி. இவர்களது மகன் காசியப்பன் (வயது 1). கடந்த வியாழக்கிழமை காலை சங்கீதா தனது வீட்டில் ஸ்டவ்வில் பாலை காய்ச்சி இறக்கி வைத்தார். அப்போது வாசலில் யாரோ அழைத்த சத்தம் கேட்டதால் சங்கீதா வாசலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தை காசியப்பன் கண்விழித்து எழுந்தான். பின்னர் தவழ்ந்து வந்து சூடான பாலை இழுத்ததில் உடலில் பால் கொட்டியது. இதில் படுகாயம் அடைந்த காசியப்பன் அலறி துடித்தான்.

அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்து காசியப்பனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை காசியப்பன் பரிதாபமாக இறந்து போனான்.

இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தரணேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post