முசிரி அருகே இளம் பெண் சடலம்

 


முசிறியில், சுடுகாடு துறை அருகே காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள முட்புதருக்குள் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நேற்று மாலை காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றவர்கள் முசிறி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முசிறி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது நீல நிற லெகின்சும், ரோஸ் கலர் மேல் உடையுடன், முகம் சிதைந்த நிலையில் அப்பெண் பிணமாக கிடந்தார். இதனையடுத்து போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து பிணமாக கிடந்த பெண் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, அவர் கொலை செய்யப்பட்டார அல்லது வேறு எங்கேனும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டு வந்து வீசப்பட்டாரா? என்பன போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post