மண்ணச்சநல்லூார் அருகே கத்தியை காட்டி செயின் பறித்த 2 பேர் கைது

 


மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் போலிசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்பட்டு இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் இருவரும் முன்னுக்குபின்னாகபதில் கூறினர். சந்தேகமடைந்த போலிசார் அவர்களை காவல் நிலையம் அமைத்து சென்றுவிசாரித்தனர்.

மண்ணச்சநல்வார் அருகில் உள்ள சுனைப்புகழ்நல்லூர் மேட்டுதெருவை சேர்ந்த வடிவேல் (வயது 28) முசிறி பெரிய கொடுந்துறை அரிசன தெருவை சேர்ந்த ராகவன் (வயது 21) என்பதும் தெரியவந்தது.

மேலும் விசாரிக்கையில் நண்பர்களான இருவரும் சேர்ந்து கடந்த மாதம் 22 ஆம் தேதி மண்ணச்சநல்லூர்  சிப்பாய்பண்ணை பகுதியில் முர்த்தி மனைவி ராணி என்பவரை கத்தியை காட்டிமிரட்டி அவர் அணிந்திருந்த ஏழரைபவுன் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரித்தபோது மதுரை திருமங்கலம் பகுதியில் டாஸ்மாக் கடை ஊழியரைமிரட்டிரூ.53 ஆயிரத்தை பறித்தது. காதல் ஜோடியை மிரட்டி மோட்டார் சைக்கிள், 5 பவுன் நகை, ரூ.6 ஆயிரம் பறித்தது உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டரை பவுன் நகை, பட்டாகத்தி, செல்போன் ஆகிவற்றை பறிமுதல் செய்த போலிசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.



Post a Comment

Previous Post Next Post