நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயும் ஏ.கே.ராஜன் குழு

 


தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

இதனிடையே சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளதா என்று ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே 2 முறை கூடி ஆலோசனை நடத்தியது. 

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் 3-வது முறையாக இன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளது. நீட் தேர்வு குறித்து மக்களிடம் கேட்ட கருத்துக்களை அந்த குழு அறிக்கையாக விரைவில் முதல்-அமைச்சரிடம் சமர்பிக்க உள்ளது.

Post a Comment

Previous Post Next Post