பிரேசிலில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

 


உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் உள்ளது பிரேசில். தென் அமெரிக்க நாடான பிரேசில் உயிரிழப்பு எண்ணிக்கையில் 2- ஆம் இடத்தில் உள்ளது. அந்நாட்டில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவியதாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது.  தொற்று பாதிப்பு குறைந்து இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

உலக நாடுகளின் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடும் வேர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி, பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 71  லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை  4,79,515- ஆக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post