திருச்சி மாநகரில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 5,901 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி மாநகரில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் அரசின் தடை உத்தரவை மீறி நேற்று முன்தினம் வரை முககவசம் அணியாத நபர்கள் மீதும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத நபர்கள் என 12,311 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்குகள் மூலம் ரூ.26 லட்சத்து 88 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.
நேற்று மட்டும் முககவசம் அணியாமல் ஊரடங்கை மீறியதாக 244 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.52 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் இதுவரை விதிமுறைகளை மீறி சுற்றித்திரிந்த 68 கார்கள், 168 ஆட்டோக்கள், 5,665 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 5,901 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 380 இரு சக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள் மற்றும் 4 கார்கள் என மொத்தம் 390 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் அரசின் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:
மாவட்டம்