சங்கங்கள் இன்றி சங்கடம் தீர்த்த கிராமப்புற தொழில் முனைவோர்கள்

 


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் சேவா மூலமாக கிராமப்புற தொழில் முனைவோர்கள் எனப்படும் இ-சேவை மையம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் கிராமப்புறங்களிலும் கொண்டு செல்வது இந்த கிராமப்புற தொழில் முனைவோர்கள் தான்.

அந்த வகையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் மகேந்திரன் என்ற கிராமப்புற தொழில் முனைவோர் ஒருவர் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் 2 தினங்களுக்கு முன்பு கோவிட் 19 காரணமாக உயிரிழந்தார்.

மகேந்திரனுக்கு குடும்பத்தாருக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமப்புற தொழில் முனைவோர்கள் சேர்ந்து சுமார் 100000 கும் மேல் ஒவ்வொருவரும் தனி தனியாக 500, 1000, 2000 என குடும்பத்தாரின் அக்கவுண்டிற்கு அனுப்பப்பட்டது.

எந்த ஒரு சங்கமும், கூட்டமைப்பும் இல்லாமல் ஒரு வாட்ஸ் ஆப் குழு மூலமாக இவ்வளவு பெரிய கூட்டு உதவி செய்தது மிகவும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இருந்தும்

உயிரை கொடுத்து மக்களுக்கு சேவை செய்ய தயாராகும் தொழில் முனைவோருக்கு  கோவிட்19 போன்ற கஷ்ட காலங்களில் அரசின் மூலம் எந்த ஒரு இழப்பீடு நிவாரணம் கிடைப்பதில்லை என்பதையும் தாண்டி அவர்களுக்கு அரசு தரப்பில் இருந்துஎந்த ஒரு இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ காப்பீடும் கூட இல்லை என்பது வேதனை அளிக்கக்கூடிய விசயமாக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post