மகள் காதல் திருமணம் ; தாய் தீக்குளித்து தற்கொலை

 


சோமரசம்பேட்டை,
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள இனாம் புலியூர் கீழத்தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி. பக்கவாதத்தால் இவர் நடக்க முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை (வயது 38). தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக  பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் இவர்களின் மூத்த மகள் சவுந்தர்யா பேரூரை  சேர்ந்த மகாமுனி என்பவரை காதலித்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த மணிமேகலை நேற்று காலை தனது வீட்டின் பின்பகுதிக்கு சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற் கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், மணிமேகலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Post a Comment

Previous Post Next Post