திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் பழைமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தினசரி பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம்.
கோவிலுக்கு செல்லும் மெயின் ரோட்டில் இன்று காலை மின் வயர் அறுந்து விழுந்தது. அந்த நேரத்தில்தான் ஒரு தனியார் பேருந்து ஒன்று கடந்து சென்றிருக்கிறது.
அதிர்ஷ்டவஷமாக தனியார் பேருந்து பயணிகள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் என அனைவரும் உயிர் தப்பினர்.
மின்சாரம் இருந்ததால், அந்த ரோட்டின் பகுதியில் யாரையும் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டனர் பொதுமக்கள். மற்றும் மண்ணச்சநல்லூர் மின்சார அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
மழைக்காலங்களில் இதுபோன்று மின் வயர் அறுந்து விழுந்து ஒவ்வொரு முறையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பிட்டி வருடங்களுக்கு ஒரு முறை மின் வயரின் தன்மைகளை பார்த்து பிறகு சரி இல்லாத மின் வயர்களை மாற்றினால் இது போன்று விபத்துக்களை தடுக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.