கடலூர் தனியர் சர்க்கரை ஆலை முன்பு போராட்டத்திற்கு செல்ல முயன்ற விவசாயி சங்க தலைவர் திருச்சியில் கைது

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளில் கடந்த 2016 ஆண்டிலிருந்து இன்று வரை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 35 லட்சம் டன் கரும்புகளை உற்பத்தி செய்து வழங்கியுள்ளனர். 

ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகம் இதுவரை அதற்கான தொகையினை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் 400 கோடி ரூபாய் நிலுவை பாக்கி விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டிய நிலையில், வெறும் 80 கோடி மட்டுமே திருப்பி தருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே சர்க்கரை ஆலை நிர்வாகம் முழுத் தொகையையும் திருப்பித் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கடலூர் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். 

இதற்காக அவர்கள் திருச்சியில் இருந்து புறப்பட தயாராகினர். இது பற்றி தகவல் அறிந்த மாநகர போலீசார் உஷாராகினர். 

பின்னர் அதிகாலை 4 மணி அளவில் உதவி போலீஸ் கமிஷனர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் அய்யாக்கண்ணு, மேகராஜன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




Post a Comment

Previous Post Next Post