20 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த சாக்கடை கால்வாய்கள் சீரமைப்பு பணி தீவிரம்

 

ஹவுசிங் யூனிட் பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாத வடிகால் கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஹவுசிங் யூனிட் பகுதியில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுத்தம் செய்யப்படாமல் இருந்த வடிகால் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே. சங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் சிவகுமார் மற்றும் பிரவீன் குமார் ஆகியோரின் தொடர் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஹவுசிங் யூனிட் முதலிபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள வார்டு செயலாளரின் ஒத்துழைப்புடன் இந்த சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட காலமாக அடைப்பு மற்றும் கழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த வடிகால் அமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post