திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகே உள்ள மூவராயன்பாளையம் மேலூரை சேர்ந்தவர் ஆனந்தன். இவர், அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த 3 பேர் புகையிலை பொருட்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு ஆனந்தன், தனது கடையில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்களை விற்பதில்லை என்று கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த 2 புகையிலை பாக்கெட்டுகளை | கடையில் வைத்துவிட்டு, உங்கள் கடையில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் கள் விற்பனை செய்கிறீர்கள் என்று மிரட்டி உள்ளனர். மேலும் தங்களை உணவு பாதுகாப்பு அதிகாரி என்றும், ரூ.20 ஆயிரம் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்யாமல் விட்டு விடுகிறோம் என்றும் கூறியுள்ளனர்.
அடைந்த ஆனந்தன், அவர்கள் கேட்டபடி ரூ.20 ஆயி ரத்தை கொடுத்துள்ளார். இருப்பினும் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஆனந்தன் /இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து,ஆனந்தனிடம் பணம் பறித்த நபர்களை தேடி வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குருவம்பட்டி டாஸ்மாக் கடை அருகே நின்று கொண் டிருந்த துறையூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அங்கமுத்து மகன் பாலு என்ற பாலச்சந்தர் (வயது 35), கீழக் கண்ணுகுளம் கிராமத்தைச் சேர்ந்தரங்கராஜ் மகன் வெங்கடாசலம் (32) ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் திருச்சிஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3கோர்ட் டில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.