கவுண்டம்பட்டி குக்கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ் அடிக்கடி பழுது ; வாரம் ஒருமுறை வராததால் மாணவர்கள் அவஸ்தை


  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி வடக்கு பஞ்சாயத்தை சேர்ந்த, கவுண்டம்பட்டி என்ற கிராமத்திற்கு தினமும் காலை 8.45 மணிக்கு ஒரு பேருந்தும், இரவு 8.00 மணி மற்றும் 8.45 மணிக்கும் வந்து செல்வது வழக்கும்.

இதில் காலை 8.45 மணிக்கு வரும் 27கே என்ற அரசு பேருந்தில் தினசரி திருப்பைஞ்ஞீலி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மணவிகளும், மண்ணச்சநல்லூர் செல்லும் அரசு பள்ளி மாணவ மாணவிகளும், திருச்சி 10 மணி வேலைக்கு செல்பவர்களும், திருச்சி மற்றும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் கர்பிணிப் பெண்கள் செல்வது வழக்கம். 

இந்தளவு முக்கியத்துவமாக இருக்கும் இந்த பேருந்து வாரத்திற்கு ஒரு முறை பழுது என்று சொல்லி வராமல் போய்விடுகிறது.

இதனால் மண்ணச்சநல்லூர் செல்லும் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் இரு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் அவர்கள் குழந்தைகளை பள்ளிகளில் கொண்டு விடுகின்றனர்.

வாகனங்கள் இல்லாதவர்கள் பள்ளி விடுமுறை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

திருப்பைஞ்ஞீலி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று செல்கின்றனர். இதனால், வாரம் ஒருமுறை பள்ளிக்கு தாதமதாக செல்லும் சூழ்நிலையில் உள்ளது.

தனது குடும்பத்திற்காக வேலைக்கும் செல்லும் ஆண்கள், பெண்களும் வேலைக்கு வாரம் ஒருமுறை தாமதமாக செல்வதால் வேலைக்கு செல்லும் இடத்திலும் சிரமமாக உள்ளது.

அரசு மருத்துவமனைக்கு செல்லும் கர்பிணி பெண்களும் அவசரத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்லமுடியாமல் உள்ளது.

ஆகையால், சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் தலையிட்டு நல்ல பேருந்தை இயக்கவும், தினசரி பேருந்து வந்து செல்ல நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Post a Comment

Previous Post Next Post