திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூரில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது
பிரதி வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் மூவராயம்பாளையம் மேலூர், கீழூர் கவுண்டம்பட்டி மேலூர், கீழூர், பார்வதிபுரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து கர்ப்பிணி பெண்கள் சிறுகாம்பூர் அரசு பொது மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
கர்ப்பிணி பெண்கள் செல்லும் இந்த பாதையில் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது
மன்னச்சநல்லூர் உளுந்தங்குடி தேசிய நெடுஞ்சாலை போடுவதற்காக சோழங்கநல்லூர் ஏரியிலிருந்து மண் கொண்டுவரப்பட்டு அந்தப் பாதை போடப்பட்டது.
இதனால் அங்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து சென்றதால் ரோடுகள் பரிந்து தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் தலையிட்டு கர்ப்பிணி பெண்கள் செல்லும் இந்த பாதை உடனடியாக சரி செய்து கொடுக்கும்படி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்