இந்நிலையில் தீபாவளி அன்று புத்தாடை அணிந்து வீட்டின் முன்பாக வெடி வெடித்துள்ளார். வெடி சத்தம் கேட்டு இவர்களின் குழந்தை கதறி அழுததாக கூறப்படுகிறது. இதனால் மனைவி, சசிகலா கணவர் முருகையாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முருகையா வீட்டிற்குள் சென்று தான் அணிந்திருந்த வேஷ்டியால் கழுத்தில் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூக்கில் தொங்கிய முருகையாவை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மயக்க நிலையில் இருந்த முருகையா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி மனைவி சசிகலா கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி அன்று வெடி வெடித்த சம்பவத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.