கரட்டாம்பட்டி கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம், புலிவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரட்டாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள. அரசு அனுமதி பெற்ற TSK கல்குவாரியினை மதுராபுரி கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் 43/24. த.பெ.சஞ்சீவி செட்டியார். என்பவர் 5 ஆண்டுகளுக்கு (10.06.24) முதல் (09.06.29)-ஆம் தேதி வரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார்.

கடந்த (03.10.24)- ஆம் தேதி காலை 11:00 மணியளவில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 1.அருண்குமார். 32/24, த.பெ.பழனிச்சாமி, (இணைச் செயலாளர், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி) 2.செல்லதுரை, 35/24, த.பெ.தர்மலிங்கம், (மண்ணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர்), 3.ராஜாங்கம், 32/24, த.பெ.சுப்ரமணி (கட்சி பொறுப்பு ஏதும் இல்லை) மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர், ஆகியோர் மேற்படி தங்கவேலிடம், அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி நடத்தி வருவதாகவும் அதற்கு ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியும் உள்ளனர்.

ஆனால் தங்கவேல் பணம் ஏதும் கொடுக்காத காரணத்தினால். அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியும். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தும். சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த (04.10.24)-ஆம் தேதி மேற்படி TSK கல்குவாரி அலுவலகத்திற்கு சென்ற மேற்படி அருண்குமார், செல்லதுரை, ராஜாங்கம் மற்றும் ஒருவர் மேற்படி தங்கவேலிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளனர். பணம் தராததால், அன்றைய தினமே மேற்படி நபர்கள் கரிகாலன் வளையொலி என்ற youtube சேனலில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், கரட்டாம்பட்டியில் அரசு அனுமதி இல்லாமல் கல்குவாரி இயங்கிவருகிறது.

இதன் உரிமம் பற்றி விசாரித்தபோது. தனியாக கவனித்துக் கொள்வதாக கூறியதாகவும், இதனை எதிர்த்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும். பின் வரும் நாட்களில் (தேதி குறிப்பிடபடாமல்) ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ நடத்த உள்ளதாக வீடியோ ஒன்றினை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று (13.10.2024)-ஆம் தேதி மேற்படி TSK கல்குவாரியின் உரிமையாளர் தங்கவேல், புலிவலம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 1.அருண்குமார். 32/24, த.பெ.பழனிச்சாமி. (இணை செயலாளர், நாம் தமிழர் கட்சி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி) 2.செல்லதுரை, 35/24. த.பெ.தர்மலிங்கம் (மண்ணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர், நாம் தமிழர் கட்சி), 3.ராஜாங்கம்,32/24. த.பெ.சுப்ரமணி (உறுப்பினர். நாம் தமிழர் கட்சி) மற்றும் அதே கட்சியை சேர்ந்த சிலர். தன்னை பணம் கேட்டு மிரட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் காவல் நிலையத்தில் குற்ற எண். Cr.No. 122/24, U/s 296(b), 351(3) BNS r/w 67 IT Act- ன் படி வழக்கு பதிவு செய்து, A2. செல்லதுரை, 35/24. த.பெ.தர்மலிங்கம் மற்றும் A3-ராஜாங்கம்.32/24. த.பெ.சுப்ரமணி ஆகியோரை இன்று (14.10.2024)-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

மேலும் வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளான A1.அருண்குமார். 32/24. த.பெ.பழனிச்சாமி. A4.கேமராவில் படம் எடுத்தவர். A5.ஆனந்தன், A6.தனபால், A7.வினோத் மற்றும் மேற்படி மிரட்டல் வீடியோவை பதிவு செய்த நபர் ஆகியோரை தேடப்பட்டு வருகிறது. இதுபோன்ற, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபவர்களை பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் 9487464651 (Helpline) எண்ணிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post