குடிப்போதையில் இருந்தவருக்கு உதவி செய்த மாணவன் மீது தாக்குதல்


திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு டீகடையில் பகுதி நேரமாக பணிபுரிந்து வருகிறார் டிப்ளமோ படித்து வரும் 17 வயது மாணவர். கடந்த 13ஆம் தேதி இரவு கடையின் முன் கருமண்டபம் குளத்துக்கரை பகுதியை சேர்ந்த கங்காதரன் என்பவர் குடிப்போதையில் படுத்திருந்துள்ளார். 

நள்ளிரவில் குடிப்போதையில் இருந்த அவரை அவரது வீட்டிற்கு கொண்டு செல்ல மாணவர் உதவியுள்ளார். இந்நிலையில் போதை தெளிந்த கங்காதரண் தன்னுடைய செல்போனை காணாமல் தேடிய நிலையில் மாணவர் தான் எடுத்திருப்பார் என்று சந்தேகப்பட்டு அவரை விசாரித்துள்ளார்.

குற்றசாட்டை மாணவர் மறுத்த நிலையில் அவரை குளத்துக்கரை கல்லறை அருகே வைத்து இரும்புகம்பியால் தாக்கியுள்ளார். பயங்கர காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கங்காதரண் மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post