திருப்பூர் மாவட்டம் திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதற்கு மாவட்ட தலைவர் ஜிகே சங்கர் தலைமையில் செம்மண்டபாளையம் , வெள்ளைக்கரடு, சிட்கோ, எம்ஜிஆர் நகர், ஹவுசிங் யூனிட், உள்ளிட்ட ஆறு இடங்களில் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன் மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், தேசராஜ் மாவட்ட தொழில்நுட்ப அணி தலைவர் விஜய், மேற்கு மாநகர தலைவர் அருண்குமார், தெற்கு பகுதி தலைவர் கே டி ஆர் ஷாஜகான் முன்னிலை வகித்தனர் விழாவில் தெற்கு ஒன்றிய தலைவர் தேவராஜ் சிட்கோ பகுதி கிளை தலைவர்கள் வடிவேல், படையப்பா விஜய் , பிரவீன் குமார், மஞ்சுநாதன், கில்லி கணேஷ் மருது ஆகியோர் கலந்து கொண்டனர் கழக நிர்வாகிகள் ரவிக்குமார் செந்தில் நவீன் விக்னேஷ் கார்த்திக் ராஜா மற்றும் பல கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்