துறையூர் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது சுரங்கம்


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சேனப்பநல்லூர் கிராமத்தில் ஜெயராமன் பெரியம்மாள் இவர்கள் இன்று வீடு கட்டுவதற்காக கூலி ஆட்களை கொண்டு அஸ்திவாரம் பறிப்பதற்கு முடிவு செய்தனர். இதற்காக குழி தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பள்ளம் தென்பட்டது

உடனடியாக தொழிலாளர்கள் அந்தப் பகுதியை மேலும் தோண்டி பார்த்தபோது அது சுரங்கம் போல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் நீளம் எவ்வளவு என்பதை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு ஆள் உள்ளே இறங்கக்கூடிய அளவுக்கு அதன் வடிவமைப்பு இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மேலும் குழி தோண்டும் பணியை நிறுத்தினர்.

தகவல் அறிந்த மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். சுரங்கம் வடிவிலான பகுதியை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

Post a Comment

Previous Post Next Post