திருவானைக்கோவில் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் ; 4 பேருக்கு கத்திக்குத்து ஒருவர் மரணம்

திருவானைக்கோவில் அருகே உள்ள திருவளர்சோலையை சேர்ந்தவர் விக்னேஷ் இவர் பொன்னி டெல்டா அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நாகேந்திரன் இவர் திருவளர்சோலையில் பழ கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விக்னேஷுக்கும் நாகேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது நாகேந்திரன் உடன்சென்ற சங்கேந்தியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் சேர்ந்து விக்னேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. அவரும் பதிலுக்கு தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று எங்கள் உறவினரை எப்படி அடிக்கலாம் என கூறி நாகேந்திரன் நண்பர்கள், ஆதரவாளர்களான திருவளர் சோலையை கீழ தெருவை சேர்ந்த ஜான் மகன் நெப்போலியன், காமராஜ் மகன் கதிரவன், சேட்டு மகன் சங்கர், ரமேஷ் மகன் கமலேஷ் உட்பட சிலர் விக்னேஷ் வீட்டிற்கு சென்று விக்னேஷிடம் எப்படி நீ அடிக்கலாம் என கூறி கேட்டுள்ளனர்.

அப்பொழுது இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விக்னேஷின் உறவினர்கள் எசனக்கோரை பகுதியில் இருந்து வந்துள்ளனர். அப்படி வந்தவர்களுக்கும் இடையே பிரச்னை இரு தரப்பினருக்கும் இடையே அடிதடி மாறியது. 

இதில் நெப்போலியன், கதிரவன், , கமலேஷ் ஆகிய நான்கு பேருக்கும் பலத்த அடி மற்றும் கத்தி குத்து விழுந்துள்ளது. அவர்கள் நான்கு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். இதில் நெப்போலியன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த கதிரவன், சங்கர், கமலேஷ் ஆகிய மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் பற்றி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்காக நூற்றுக்கணக்கான போலீசார் திருவளர்சோலை பகுதியில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருவளர் சோலை பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post