மகள் சாய் நந்தினி (11) மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். மகன் கோகுல்நாத் (14) மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக கீர்த்திகா மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கி கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ரைஸ்மில் கூலி வேலைக்கு சென்று மீண்டும் இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி, மகன், மகள் ஆகிய மூன்று பேரும் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை காரணமாக கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கீர்த்திகா தனது குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது எனவும், அல்லது கடனை கட்ட சொல்லி யாரேனும் தொந்தரவு செய்தனரா? அதனால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்களா என தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.