மண்ணச்சநல்லூர் சமயபுரம் ரோடு பகுதியில் அசடுகளாக தேங்கி நிற்கும் சாக்கடை நீர் ; பேரூராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?

திருச்சி மாவட்டம், மண்ணச்சல்லூரில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே பாதாள சாக்கடை வேலை முடிந்துவிட்டது. 

பேரூராட்சி ஊழியர்கள் தினமும் குப்பைகளாக தேங்கி நிற்கும் அசடுகளை நீக்கி வெளியே போட்டு, அந்த அசடு குப்பைகளை பேரூராட்சி வாகனத்தில் எடுத்து செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில வாரங்களாக அந்த அசடுகளை சரிவர எடுக்காத காரணத்தால், சமயபுரம் ரோடு இ-சேவை மையங்களின் அருகே சாக்கடை நீர் தேங்கி, சில சமயம் கடை வாசல் வரைவந்து விடுகிறது.

இ&சேவை மையத்திற்கு தினசரி குழந்தைகள், கர்பிணிப்பெண்கள் பொதுமக்கள் என பலரும் வந்து செல்லும் இடத்தில் இப்படி அசடுகளாக தேங்கி ஈக்கள் மொய்த்து நோய் பரவும் அபாயம் இருப்பதால் பேரூராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்து அசடுகளாக தேங்கி நிற்கும் சாக்கடையை நீக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post