மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை தெற்குத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்க ளுக்கு திருமணமான நிலையில், முதல் மகனுக்கும், நான்காவது மகனான வெல்டிங் வேலை செய்து வந்த விக்னேஷ் (23) என்பவருக்கும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது பெற்றோர்களிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு விக்னேஷ் கூறி வந்துள்ளார். நேற்று, மது அருந்திவிட்டு வந்தவிக்னேஷ் மீண்டும் இது குறித்து பெற்றோரிடம் கேட்டுள்ளார்.
அப்போது, அவருக்கும், பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்