திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் தனியார் கல்லூரி (தனலட்சுமி சீனிவாசன்) செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி மகள் தாரணி (19). முதலாம் ஆண்டு பி.டெக் பாட பிரிவை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வந்த தாரணி நேற்று விடுதியறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த நிலையில் உயிரிழந்த மாணவியின் தந்தை பாலாஜி புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில்.... நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். எனது மகள் B.தாரணி அவர்கள், சமயபுரம் தனலெட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் B.Tech. 1வது வகுப்பு படித்து வத்தாள். இன்று மதியம் 12.30 மணியளவில் எனது மகள் தாரணி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மெண்டார் [mentor] ஆகியோர் மிகவும் கருமையாக திட்ருவதாகவும், என்னை வந்து உடனடியாக வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என கூறினார்.
நான் எனது மகளை பார்க்க இன்று மாலை 4.30. மணியேளயில் கல்லூரிக்கு வந்தேன். நான் விடுதிக்கு வந்து எனது மகளை சந்திக்க வேண்டும் என கூறினேன் மாலை 6.30 மணி வரை எனது மகளை சந்திக்க விடவில்லை. நான் ஏன் காலதாமதம் படுத்துகீறிர்கள் என கூறி உள்ளே செல்ல முயற்ச்சித்த பொழுது தான், கல்லுாரி நிர்வாகத்தினர் என்னை ஐந்தாவது மாடிக்கு அழைத்து சென்று, அறை எண் 512ல் படுக்கையில் எனது மகள் பிணமாக கிடப்பதை காட்டினர்கள். மேலும் எதை மகள் ஜன்னல் கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்கள்.
எனது மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லை.எனது மகளின் இறப்பில் கல்லூரி நிர்வாகத்தின் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே எனது மகள் தாரணி இறப்பு குறித்து உரிய விசாரனை மேற்கொண்டு, இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பனிவுடன் வேண்டுகிறேன்.