திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேலவாளாடி, புதுக்குடி, குடித்தெருவை சேர்ந்தவர் மனோஜ்குமார் (28). இவர் நேற்று இரவு நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பட்டூர் செல்வதற்காக அரசு பேருந்தை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
அப்போது நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் பேருந்தை திருப்பும் போது நடந்து சென்ற மனோஜ்குமார் மீது மோதி வலதுபுற பின்னால் டயர் முகம் மற்றும் வயிற்றுப் பகுதியில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.