திருவெள்ளறையில் காய்கறி விற்க வந்தவனுடன் பழக்கம் ; அரிவாளால் வெட்டிய இளைஞர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிரிநாத் (20) என்பவர் கிராமப்புறங்களுக்கு காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருவெள்ளறை கிராமத்திற்கு கிரிநாத் காய்கறி விற்பதற்கு வந்த போது அப்பகுதியில் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திருவெள்ளறை கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (20) அதே பகுதியில் அதே பெண்ணை இரண்டு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சந்தோஷ் எந்த ஒரு வேலையும் இல்லாமல் ஊரை சுற்றி வருவதால் அதனைக் கண்ட அந்த  பெண் சந்தோஷிடம் இருந்து  பழக்கத்தை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத சந்தோஷ் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு  காதலி வீட்டிற்கு சென்று அந்த பெண்ணிடம் நீ யாரை காதலிக்கிறாய் என எனக்குத் தெரியும் அவன் தலையை வெட்டி கொண்டு வருவேன் என கூறிவிட்டு சந்தோஷ் சென்றதாக கூறப்படுகிறது.

பெரமங்கலம் கிராமத்தில் உள்ள காமாட்சி கோவில் அருகே  பகுதியில் கிரிநாத் அவரது  தம்பி விஷ்ணு மற்றும் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சந்தோஷ் அவரது நண்பர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த கிரிநாத் அவரது தம்பி விஷ்ணு உள்ளிட்ட இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அப்போது சந்தோஷ் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் வெட்டியதில் கிரிநாத்திற்கு இடது கை மற்றும் தலையில் பகுதியில் காயம் ஏற்பட்டு அங்கு மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இவரது தம்பி விஷ்ணுவுக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம், பக்கத் தில் இருந்தவர்களுடன் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த கங்கேஸ் (56), அவரது மகன் ரீகன் (26) ஆகியோர் அங்கு வந்து சண்டையை நிறுத்த முயற்சி செய்தவர்களுக்கு அங்கு இருந்த பேட் மற்றும் ஸ்டெம்ப் கட்டையால் தலையில் தாக்கியதில் கங்கேஸ் மற்றும் அவரது மகன் ரீகன் இருவரையும் மண்டை உடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த புலிவலம் போலீசார் காயம் பட்ட நபர்களை 108 ஆம்புலன்ஸ் உதவியோடு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து கொண்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து  புலிவலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Post a Comment

Previous Post Next Post