கலந்து கொண்ட போர்களில் வெற்றி மட்டுமே கண்ட பேரரசரும், தமிழுக்கு முதன் முதலில் மெய்கீர்த்தி கண்ட அரசரும் ஆகிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா ஒவ்வொரு வருடமும் மே 23ம் தேதி அரசு சார்பில் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த வருடமும் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதன்முதலாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், மாவட்ட ஆணையர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், முத்தரையர் சமுதாய தலைவர்கள், இளைஞர்கள் என பலரும் தற்போது ஊர்வலமாக வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் எதும் ஏற்பமாடல் இருக்கு 500 போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்