வீட்டில் கோபித்து சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது

திருச்சியைச் சேர்ந்த சிறுமி வீட்டில் கோபித்துக் கொண்டு மணப்பாறை அடுத்த நடுப்பட்டி கிராமத்தில் உள்ள அத்தை வீட்டுக்கு செல்வதற்காக மணப்பாறை பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார்.

அப்பொழுது மணப்பாறை பாரதியார் நகரை சேர்ந்த முல்லை முருகேசன் (42) சிறுமியிடம் நைசாக பேச்சி கொடுத்து சிறுமி கூட்டிக்கொண்டு சென்று தனியார் விடுதியில் அறை எடுத்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து பின்னர் மணப்பாறை பேருந்து நிலையத்தில் விட்டுள்ளார். சிறுமி நடுப்பட்டி உள்ள அவர் அத்தை வீட்டுக்கு சென்று நடந்ததை அழுதபடி கூறியுள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அழைத்து சென்று பின்னர் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் அடிப்படையில் சிறுமியை அழைத்துக்கொண்டு மணப்பாறை வந்த போலீசார் சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு உறுதி செய்த பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக திருச்சிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முல்லை முருகேசனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post