திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலியில் ஒவ்வொரு சித்திரை மாதமும், சித்திரா பவுர்ணமி தேர்திருவிழா நடைபெறும்
அந்தவகையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் தேர் வடம் இழுக்கப்பட்டது.
இரவு 6 மணியளவில் கவுண்டம்பட்டி செல்லும் மூளை பகுதியில் தேர் வந்தபிறகு சன்னகட்டை போடும் அடைப்பு கட்டை உடைந்ததது.
கோயில் நிர்வாகத்தினர் சரிசெய்து பார்த்தும் சன்னகட்டை போடமுடியாததாலும், இரவு நேரத்தில் சன்னகட்டை போடமுடியாமல் போனதாலும் தேர் பாதியில் நின்றது.
போனவருடமும் கவுண்டம்பட்டி மூளை வந்தபிறகு தேர் சக்கரம் மழை நீர் சேற்றில் சிக்கி இரண்டு நாட்கள் ஓடியது.
இந்த வருடமும் கவுண்டம்பட்டி மூளை வந்தபிறகு சன்னகட்டை அடைப்பு கட்டை உடைந்து பாதியில் நின்று போனது.
இன்று மதியம் 3 மணியளவில் மறுபடியும் தேர் வடம் இழுக்கப்படுகிறது
Tags:
நம்ம ஊரு செய்திகள்