கடன் உயிரை எடுக்கும் ; லால்குடி அருகே 20 ரூபாய் கு கொலை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொன்னக்குடி ஊராட்சியில் ஜோசப் ராஜ்( வயது 50 ).இவரது மனைவி ஆரோக்கியமேரி இவர்கள் அதே பகுதியில் பவுல் பாண்டியன் என்ற ஹோட்டல் நடத்தி வருகிறார் .

அதே பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஏசுதாஸ் (வயது58) இவர்கள் ஹோட்டலில் சாப்பிட்ட பாக்கித் தொகை ரூ.20 யை கொடுக்காத்தால் ஜோசப் ராஜ் கடையிலிருந்து மூங்கில் கட்டையினை எடுத்து ஏசுதாஸ் தலையில் பலமாக அடித்துள்ளார். 

இதில் படுகாயம் அடைந்த ஏயேசுதாஸ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 உயிரிழந்த ஏசுதாஸுக்கு ப்ளோரா ராணி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் திருமண வயதில் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஜெய பிரபா என்ற மகள் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிந்து ஜோசப் ராஜ் மற்றும் அவரது மனைவி ஆரோக்கியம் மேரி ஆகிய இருவரையும் தேடி  வருகின்றனர்

Post a Comment

Previous Post Next Post