திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பெரம்பலூர் மற்றும் ஆத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைத்து கொண்டு செல்லும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது செயல்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் விவசாய அணி பிரிவின் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணைகள் அமைத்தால் நீர்மட்டம் உயரும் என்றும் பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதுநாள் வரை அரசு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு மணல் குவாரி அமைத்து மணலை மட்டுமே எடுத்து இருக்கிறார்கள்.
தற்போது நொச்சியதில் இருந்து சிறுகாம்பூர் வரும் வழியிலேயே சுமார் 10 ஆழ்துளை கிணறுகள் அமைத்து வெளி மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதால் இங்கு உள்ள விவசாயிகளின் நிலைமை மிகவும் பாதிப்படையும் என்றும் இங்கு உள்ளவர்களுக்கு குடிநீர் கூட இல்லாமல் போய்விடும் என்றும் இந்த திட்டத்தை உடனடியாக நீக்கும்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tags:
நம்ம ஊரு செய்திகள்