திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இந்த நிலையில், 2-வது இளைஞர் அணி மாநில மாநாடு சேலத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக திமுக கட்சி கொடியேற்றப்பட்டது. கொடியை திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டில் பங்கேற்க சாரை சாரையாக தொண்டர்கள் திரண்டு வருதால் வருதால் பாதுகாப்பு பணியில் மேற்கு மண்டல ஐ.ஜி.பவானீஸ்வரி தலைமையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
Tags:
தமிழகம்