தரிசனம் செய்ய அதிக பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அயோத்தியில் ராமர் சிலை ஊர்வலம் ரத்து

அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. 16-ந்தேதி முதல் அதற்கான வேலைகள் தொடங்க இருக்கிறது. கோவில் கருவறையில் குழந்தை வடிவிலான ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

இதற்கு முன்னதாக 17-ந்தேதி கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை வடிவிலான ராமர் சிலையை அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. கருவறையில் நிறுவப்படும் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய கூடுவார்கள். குறிப்பாக அயோத்தி நகருக்கு வெளியே உள்ள பக்தர்கள், பொது மக்களும் அதிக அளவில் தரிசனம் செய்வதற்காக கூடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என அயோத்தி பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். 
இதனால் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, ராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது ரத்து செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக கோவிலுக்குள் வைக்கப்படும் சிலை ஊர்வலாக எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Previous Post Next Post