விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும். விளைச்சல் அதிகரிக்கும் பட்சத்தில் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து விலை சட்டென குறையும். தற்போதும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாய் ஆக குறைந்துள்ளது. திருச்சி வெங்காய சந்தைக்கு சின்ன வெங்காயம் 1000 டன் வரத்து வந்துள்ளது. பெரிய வெங்காயம் 500 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளது.
சின்ன வெங்காயம் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும், வெங்காயம் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். சின்ன வெங்காயம் விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், விவசாயிகள் மத்தியில் கவலையடைய வைத்துள்ளது.
சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை அதன் விலை எப்போதுமே சீராக இருக்காது. வரத்து பொறுத்து விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயரும். விளைச்சல் அதிகரிக்கும் பட்சத்தில் சந்தைகளுக்கு வரத்து அதிகரித்து விலை சட்டென குறையும். தற்போதும் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 10 ரூபாய் ஆக குறைந்துள்ளது.
திருச்சி வெங்காய சந்தைக்கு சின்ன வெங்காயம் 500 மூடை வரத்து வந்துள்ளது. பெரிய வெங்காயம் 500 மூடை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாலும் வெங்காயம் அதிக அளவில் தேக்கமடைந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். சின்ன வெங்காயம் விலை குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் விவசாயிகளை கவலையடைய வைத்துள்ளது.