தாமதமாகும் தார் சாலை ; வாகன ஓட்டிகள் அவதி


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி முதல் பழையூர் தண்ணீர் பந்தல் வரை சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது 

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்த நிலையில் ஒரு 15 நாட்களுக்கு முன் ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலையை ஜெ சி பி வைத்து கீரி போடப்பட்டிருந்தது பிறகு 7 நாட்களுக்கு முன்  முதல் நிலையாக விரிவு செய்யப்பட்ட இடமும் ஏற்கனவே போடப்பட்டிருந்த இடமும் சேர்த்தது முக்கால் ஜல்லி போட்டு வைத்திருந்தனர்.

பிறகு தார் போட்டு அடுத்த நிலை செயல்பட்டால்தான் ரோடு முழுமையாக வேலை முடியும் 

இந்த நிலையில் தார் போடாமல் இருப்பதால் முக்கால் ஜல்லிகள் அனைத்தும் வாகனம் செல்ல செல்ல மேலே பெயர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் இவர்கள் ஒரு பக்கம் ஓட்டினால் அது ஒரு பக்கம் இழுத்து செல்கிறது.

மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்ற பிறகு புழுதி பறந்து இரண்டு சக்கர வாகன ஓட்டிகளால் வாகனம் இயக்க முடியாமல் 5க்கும் மேற்பட்ட நபர்கள் விழுந்து கை கால் உடைந்து போகி உள்ளது 

ஆகையால் விரைவாக தார் போட்டு சாலை அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தது வருகின்றனர் 


 

Post a Comment

Previous Post Next Post