வங்கிக்கு அக்டோபரில் அதிக விடுமுறை

 


அக்டோபர் மாதத்திற்கு இன்னும் நான்கு நாட்களே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும், வரும் அக்டோபர் மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன. இதன் காரணமாக வங்கி விடுமுறை பட்டியல் சிறிது நீளமாக இருக்கிறது. அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, அக்டோபர் மாதத்தில் 16 நாட்களுக்கு வங்கிகளில் வேலை இருக்காது.இதில் இரண்டு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களும் அடங்கும்.

இத்தகைய சூழ்நிலையில், வங்கி விடுமுறைகளின் பட்டியலை அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இருப்பினும், இப்போதெல்லாம் வங்கி தொடர்பான பெரும்பாலான பணிகள் ஆன்லைனில் அல்லது டிஜிட்டல் முறையில் செய்யப்படுகின்றன. என்றாலும் இன்னும் சில பணிகளுக்கு நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதென்னவோ உண்மை. இதன் காரணமாக நீங்கள் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலைப் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

மாதத்தின் முதல் நாளான அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதைத் தொடர்ந்து, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது. பின்னர் அக்டோபர் 8ம் தேதி இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்றும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதற்குப்பிறகு, அக்டோபர் 14 இரண்டாவது சனிக்கிழமை அத்தோடு மஹாளய அமாவாசையும் சேர்ந்து கொள்கிறது இதனால் அன்றைய தினமும் நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும். அக்டோபர் 15ம் தேதி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

Post a Comment

Previous Post Next Post