சமயபுரம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

திருச்சி மாவட்டம் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமயபுரம் தீயணைப்புத்துறை சார்பில் தீ ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், எண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும், அவசர காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

சமயபுரம் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமயபுரம் முன்னணி தீயணைப்பு வீரர் பழனிச்சாமி, சுதர்சன், சதீஷ்குமார், தர்மராஜா மற்றும் பெரியசாமி ஆகியோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செய்முறை விளக்கம் செய்து காட்டினர்.

நிகழ்ச்சியின் போது பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் போது தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முறை, தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்கை பயன்படுத்தி தீ அணைக்கும் முறை, மணலை பயன்படுத்தி தீயை அணைக்கும் முறை போன்றவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி மூலம் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் பயன் பெற்றனர்.


Post a Comment

Previous Post Next Post