திருச்சி திமுக மிரட்டலால் பிரியாணி கடை - ஹோட்டல்களுக்கு பூட்டா?

நீட்டுக்கு எதிராக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரில் நடைபெற்றுவரும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க திமுகவினரின் உண்ணாவிரத போராட்டத்தின் எதிரொலியாக உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு எதிரே செயல்பட்டு வந்த பிரபல திண்டுக்கல் பிரியாணி, மற்றும் சைவ உணவுகள் அனைத்தையும் திமுகவினர் மிரட்டலின் காரணமாக இன்று ஒரு நாள் பூட்டிவிட்டு, கடைக்கு விடுமுறை அளித்துவிட்டு சென்றுள்ளனர். 

திமுகவினரையும் பிரியாணியையும் பிரிக்க முடியாது என்பதனால், அதே நேரம் உண்ணாவிரதத்திற்கு வந்த திமுகவினர் ஆங்காங்கே பிரியாணி கடைகளில் உணவருந்த சென்று விடுவார்கள் என்பதனால் உணவுகள் மற்றும் பிரியாணி கடைகளை மூட சொல்லியதாகவும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க திருச்சியில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் மன்னச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவன் போராட்டத்தில் முழுவதுமாக கலந்து கொள்ளாமல் வந்துவிட்டு உடனடியாக ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துவிட்டு நடைபெற்றது திமுகவினர் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது, இதேபோன்று திமுக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இனிக்கோ இருதயராஜ் எம்எல்ஏ இந்த உண்ணாவிரத போராட்டத்தின் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்,லால்குடி எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் கலந்து கொண்டு விட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டனர்

Post a Comment

Previous Post Next Post