அந்த பகுதியில் ஆடு மேய்த்த நபர்கள் அதை கண்டபோது உடனே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
விசாரணையில் அந்த பெண் பூனாம்பாளையம் பட்டறை முடக்கு கமல்ராஜ் மனைவி சந்திரா, அவருக்கு 2 மகள்கள் மற்றும் 1 மகள் உள்ளதாக கூறப்படுகிறது. பெண்ணின் கழுத்திலும், தலையில் வெட்டுப்பட்ட நிலையில் சடலம் கிடந்துள்ளது. மோப்பநாய் நிலா வரவழைக்கப்பட்டு சடலத்தை ஆய்வு செய்து, பிறகு திருச்சி - துறையூர் நெடுஞ்சாலை வரை ஓடிய பிறகு நின்று விட்டது.
இறந்தவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது
அந்த பாறை அருகே இறந்த நபர், படுதாவை வைத்து சிறிய கொட்டகை போல் அமைத்து இருந்ததை ஆய்வு செய்தனர்.
கொலையாளி இவரிடம் நகைக்காக கொலை செய்தனரா இல்லை இரவு நேரத்தில் மது அருந்த செல்லும்போது போதையில் இவரை கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மற்றும் வேறு எதும் காரணம் உள்ளதா பல கண்ணோட்டத்தில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.