சுக்காம்பட்டி கறி விருந்தில் தகராறு ; இளம் வாலிபர் கத்தியால் குத்தி கொலை

திருச்சி மாவட்டம் முசிறி அருகிலுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சோழராஜா பட்டாளம்மன் குடிபாட்டு கோயில் அமைந்துள்ளது. இந்த குடி பாட்டு கோயிலுக்கு உரிய பங்காளிகள் பொங்கல் வைத்து திருவிழா நடத்தியுள்ளனர்.

இத்திருவிழாவிற்கு மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞீலி அருகேயுள்ள சுனைபுகநல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பொங்கல் வைத்து விருந்து வைத்துள்ளார். இந்த விருந்திற்கு சுனைப்புகநல்லூரை சேர்ந்த பிச்சை மகன் தீபக் (18) பெயிண்டர் வேலை செய்து வருகிறார்) சென்றுள்ளார்.

இதே போல சுனைப்புக நல்லூர் சேர்ந்த உதயகுமார் (31) உதய பிரகாஷ் ( 27 ) ஆகிய இருவரும் சுக்காம்பட்டியில் நடைபெற்ற ராம்குமார் என்பவருடைய வீட்டின் விருந்துக்காக சென்றுள்ளனர். 

அப்போது தீபக் மற்றும் உதயகுமார், உதயபிரகாஷ் மற்றும் சிலருடன் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் தீபக் கத்தியால் குத்தி சம்பவயிடத்தில் இறந்துள்ளார்.

தகவலறிந்த முசிறி போலீஸார் சம்பயிடம் சென்று இறந்த தீபக் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சந்தேகத்தின் பேரில் உதயகுமார் மற்றும் உதயபிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தும், 

இதில் சம்பந்தப்பட்டதாக தப்பியோடியதாக கூறப்படும் விஜயகுமார், வெங்கடேஷ் ஆகிய இருவரை முசிறி போலீஸார் தேடி கொண்டு இச்சம்பவம் தொடர்பாக மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்தில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post