திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவன் கோவில் மிகவும் பிரசீது பெற்ற கோவில்
இங்கு இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக அன்பர்கள் மற்றும் சிவன் அடியார்கள் தினசரி ஆயிரக்கணக்கில் வந்து செல்வது வழக்கம்
அது மட்டுமின்றி இங்கு செய்யப்படும் பரிகாரத்திற்காக சிட்டி விளக்கு பூ மாலை மற்றும் நிறைய பொருட்கள் குப்பைகளாமா மாறி
கோவிலில் இருந்து கொண்டு வந்து குப்பைகள் கோவிலின் பின்புறத்தில் வாரச்சந்தைக்கு அருகே வாகன ஓட்டிகள் அதிகம் செல்லும் கவண்டம்பட்டி சாலையில் கொட்டி விடுகின்றனர்
அது மட்டும் இன்றி இங்கு உள்ள சில தனியார் ஓட்டல்களும் ஓட்டலில் வீணாகும் பொருட்களையும் கொட்டுவதுண்டு.
கொட்டப்படும் குப்பைகள் இரவு நேரங்களில் கொளுத்தி விட்டு சென்று விடுகின்றனர்
அதிகம் காற்று அடித்து சில நேரங்களில் பற்றி எரிகிறது
சில நேரங்களில் புகைச்சலுடன் காணப்படுகிறது.
இது குறித்து அந்த செல்லும் வாகன ஒட்டிக்கல் சென்று பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கேட்டால் அது கோவிலின் நிர்வாகத்த்தில் இருப்பதாக சொல்வதாகவும்.
கோவிலிடம் சென்று கேட்டால் இது பஞ்சாயத்து நிர்வாகத்திடம் இருப்பதாக மாறி மாறி சொல்வதாக கூறப்படுகிறது.
யார் என்ன சொன்னாலும் மக்களின் கண் புகைச்சல் குறைந்த பாடில்லை என்று புலம்பலுடன் வாகனம் ஒட்டி செல்கின்றனர் அந்த பகுதி பொதுமக்கள்