தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் பயன்பாடு மற்றும் புகையிலை பயன்பாடு, பள்ளி செல்லும் மாணவர்கள் கூட அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனால் எதிர்காலத்தில் போதை மற்றும் புகையிலைக்கு அனைவரும் அடிமையாக சூழ்நிலை ஏற்படக்கூடும் என்பதால்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தில்
புகையிலை மற்றும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் அடங்கிய போர்டு கையில் பிடித்து கொண்டும்.
அனைத்து மாணவிகளும் உச்சரித்து சென்றனர்.
ஊர்வலமானது காந்தி பூங்கா வரை சென்றது
Tags:
நம்ம ஊரு செய்திகள்