துறையூர் அருகே பச்சைமலை அருவியில் குளித்த இரண்டு பேர் உயிரிழப்பு

ஊட்டியைச் சேர்ந்த நிஷாந்த்(24), தமீம் (23), ஜெஸ்டின்(23), துறையூர் அருகே தா.பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆகிய நான்கு பேரும் பச்சமலையில் பெரிய மங்களம் கிராமத்திலுள்ள மங்களம் அருவிக்கு நேற்று சென்றனர். அங்கே நிஷாந்த், தமீம், ஜெஸ்டின் ஆகியோர் அருவியில் குளித்துக் கொண்டிருந்த போது வழுக்கி விழுந்தனர்.

இதில் பலத்த காயமடைந்த தமீம், ஜெஸ்டீன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். உடன் சென்ற பெண் அருகில் வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்து நிஷாந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அளிக்கப்பட்ட முதலுதவிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு நிஷாந்த் அனுப்பப்பட்டார். இது தொடர்பாக தகவலறிந்த தம்மம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீசார் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.


Post a Comment

Previous Post Next Post