திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ அலுவலகம் எதிரே சிறிய சாக்கடை கால்வாய் செல்கிறது.
இதில் சாக்கடையில் ஏதும் அடைப்பு ஏற்பட்டால் ஊழியர்கள் சில உபகரணங்களை வைத்து அந்த அடைப்பை எடுத்து விடுவதர்காக திறந்த வெளியில் உள்ளது சாக்கடை.
அதன் அருகில் சில தனியார் நிறுவனங்களும் மற்றும் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் வருவதற்காக சாக்கடையை மூடி உள்ளனர்.
இன்று மதியம் 3 மணியளவில் அந்த பகுதியில் சுற்றி திரியும் ஆட்டு கூட்டத்தில் ஒரு ஆட்டுக்குட்டி மட்டும் அந்த திறந்த சாக்கடையில் விழுந்தது. பிறகு அங்கு இருந்தவர்கள் பிடிக்க முயன்ற பொது. வங்கிக்கு அருகில் உள்ள சாக்கடையில் சிக்கிக்கொண்டது. சாக்கடை மூடி இருந்ததால் சாக்கடைக்குள் சென்று யாரும் ஆட்டை பிடித்து வர முன் வரவில்லை.
பிறகு வார்டு கவுன்சிலர் கொடுத்த தகவலின்படி பேரூராட்சி ஊழியர்கள் இரண்டு பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து. அதில் ஒருவர் மட்டும் சாக்கடைக்குள் இறங்கி சிக்கி இருந்த அட்டை மீட்டார்.
சாக்கடைக்குள் விழுந்த அட்டை மீட்டவரை அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.