திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (51). காய்கறி வியாபாரி இவருக்கு முருகேசனுக்கு முசிறியில் உள்ள ஒரு வங்கிக்கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. ஒரு வருடத்திற்கு முன் அவரது கணக்கிற்கு அதே வங்கி கிளையில் இருந்து ரூ.2 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
2 லட்சம் ரூபாய் வந்ததைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த முருகேசன் அந்தப் பணத்தை எடுத்து செலவு செய்து விட்டார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வங்கிக் கிளைக்கு வந்த வாடிக்கையாளர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது கணக்கில் செலுத்தப்பட்ட ரூ. 2 லட்சம் கணக்கில் இல்லை என்று மேலாளரிடம் புகார் செய்துள்ளார்.
கணக்குகளை ஆய்வு செய்தபோது முருகேசன் வங்கிக் கணக்கில் வரவு வைக் கப்பட்டது தெரிந்தது. இந்நிலையில் வங்கி மேலாளர், அந்த வாடிக்கையாளருடன் சில நாட்களுக்கு முன் முருகேசனின் வீட்டிற்கு சென்று, பணம் தவறுதலாக வரவுவைக்கப்பட்ட விவரத்தை கூறி அதை திருப்பி செலுத்துமாறு கூறியுள்ளார்.
ஆனால் முருகேசனிடம் திரும்ப செலுத்த பண இல்லை. இதனால். வசதி இல்லை. மனமுடைந்த முருகேசன் பூச்சி மருந்து குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த முருகேசனை அவரது குடும்பத்தினர் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.