திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கவண்டம்பட்டியில் அமைந்திருக்கும் மகா சூலினி மாரியம்மன் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் நடைபெறும்
அந்த வகையில் இந்த வருடமும் வைகாசி மாதம் 12ம் தேதி வெள்ளிக்கிழமை கரகம் பாலித்தல் மூலமாக ஆரம்பித்து
வைகாசி மாதம் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்று, வைகாசி மாதம் 15ம் தேதி திங்கட்கிழமை பால்குடம் ஊர்வலம் நடைபெற்று
கடைசி நாளான இன்று வைகாசி 16ம் தேதி செவ்வாய்கிழமை அம்பாள் திருத்தேர் வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அருள்வாக்கு கேட்டு பயனடைந்தனர்.
Tags:
நம்ம ஊரு செய்திகள்